தமிழகம்

நெல்லையில் 1500 குடும்பங்களுக்கு நிலவேம்பு குடிநீர் சூரணம் வழங்கல்: மத்திய ஆயுஷ் அமைச்சக அறிவுறுத்தலின்படி நடவடிக்கை

அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா வைரஸை கட்டுபடுத்தும் வகையில் முதற்கட்டமாக 1500 குடும்பங்களுக்கு நிலவேம்பு குடிநீர் சூரணம் வழங்கப்பட்டது

திருநெல்வேலி மாவட்டத்துக்கு அன்மையில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலகளிலிருந்து வருகை தந்தவர் விவரங்கள் பெறப்பட்டு அவர்களது இல்லங்களில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய ஆயுஷ் அமைச்சக அறிவுறுத்தலின்படி 14 நாட்களுக்கு தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என்ற அடிப்படையில் இது வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் சித்த மருத்துவ கல்லூரி மூலம் தயாரிக்கப்பட்ட நில வேம்பு குடிநீர் சூரணம், கை கழுவும் கிருமி நாசினி ஆகியவை மாவட்டம் முழுவதும் வழங்க திட்டமிடபட்டுள்ளது.

முதற்கட்டமாக வள்ளியூர் பகுதிகளுக்கு 500 குடும்பங்களுக்கும், சேரன்மகாதேவி பகுதிகளுக்கு 500 குடும்பங்களுக்கும்,மானூர் பகுதிகளுக்கு 500 குடும்பங்களுக்கும் என 1500 குடும்பங்களுக்கு நில வேம்பு குடிநீர் சூரணம் கை கழுவும் கிருமி நாசினி சம்மந்தப்பட்ட வட்டாச்சியர் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT