பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

சமூக இடைவெளியைப் பின்பற்றாத 28 இறைச்சிக் கடைகளுக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம ‘சீல்’

வி.சீனிவாசன்

சேலத்தில் சமூக இடைவெளி ஏற்படுத்தி வியாபாரம் மேற்கொள்ளாத 28 இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற வரும்போது தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க, சமூக இடைவெளி ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று அனைத்து இறைச்சி, மீன் கடைகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்திட, சமூக இடைவெளிக் கோடுகள் வரைய மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இதனைக் கண்காணிக்க 5 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இக்குழுவினர் மாநகர் முழுவதும் இன்று திடீர் தணிக்கை மேற்கொண்டதில், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்ட அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதியில் சமூக இடைவெளி ஏற்படுத்தி வியாபாரம் மேற்கொள்ளாத 28 இறைச்சி மற்றும் மீன் கடைகள் கண்டறியப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. இக்கடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT