மதுவிலக்கை வலியுறுத்தி உண் ணாவிரதம் இருக்க முயன்ற சட்ட மாணவி நந்தினியை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை புதூர் அருகே காந்தி புரத்தைச் சேர்ந்தவர் சட்ட மாணவி நந்தினி. இவர் மதுவிலக்கு கோரி தொடர்ந்து பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகிறார். நேற்று சென்னை கோட்டை அருகே போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர் அறிவித்திருந்தார். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்த தால், மதுரை காந்தி அருங்காட் சியகத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகத் தெரிவித் தார். இதனால், நேற்று காலை நந்தினியின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வோம் எனத் தெரிவித்தனர்.
திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என நந்தினி கூறவே, அவரையும், அவரது தந்தை ஆனந்தனையும் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.