தமிழகம்

நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட மீனவர் உயிரிழப்பு

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கபட்டிருந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

இறந்தவரின் ரத்த மாதிரிகள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பரிசோதனைக்குப் பின்னரே அவருக்கு கரோனா தொற்று இருந்ததா என்பது உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த நபரின் மகன் அண்மையில் வெளிநாட்டில் இருந்து கன்னியாகுமரி திரும்பியுள்ளார். மேலும், இறந்த நபரும் நோய்வாய்ப்படுவதற்கு முன்னதாக அடிக்கடி கேரளா சென்றுவந்துள்ளார். இருமல் அதிகமானதால் அவர் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் ஏற்கெனவே ஒருவர் இறந்தார். அவரின் ரத்தப் பரிசோதனை முடிவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT