பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

பொதுமக்கள் என்னென்ன நிவாரணப் பொருட்களை அரசுக்கு வழங்கலாம்? - சுகாதாரத்துறை விளக்கம்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகள் மற்றும் சிகிச்சைகளுக்காக பொதுமக்கள் என்னென்ன பொருட்களை நிவாரணமாக வழங்கலாம் என்பது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநர் விளக்கியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் சிகிச்சைகளுக்காக பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் உள்ளிட்டோர் தங்களால் இயன்றதை நிதியுதவியாக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கலாம் என தமிழக அரசு ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தது. எப்படி நிதியுதவியை வழங்கலாம் என்ற வங்கி விவரங்களும் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று நிவாரணப் பணிக்கு பொதுமக்கள் பொருளுதவி வழங்கலாம் என, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (மார்ச் 28) வெளியிட்ட அறிவிப்பில், கீழ் குறிப்பிட்டுள்ள உதவிப் பொருட்களை மக்கள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள தற்காப்புப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிப் பொருட்களை சம்மந்தப்பட்ட மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரிடம் நேரில் வழங்குமாறு பொது சுகாதார மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT