தமிழகம்

2,642 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுதலை: அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கைளின் ஒரு பகுதியாக தமிழக சிறைகளில் உள்ள 2 ஆயிரத்து 642 விசாரணைக் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வரும் நாட்களில் பாதிப்பு அதிகரிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக பல்வேறு புதிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விசாரணைக் கைதிகள் அதிக அளவில் சிறைகளில் இருப்பதால், கரோனா தொற்றை தடுக்கஅவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் பரவலாக இருந்தது.

இந்நிலையில் இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ‘‘தமிழக சிறைகளில் இருந்து 2 ஆயிரத்து 462 விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பரோலில் வெளியே சென்ற கைதிகளுக்கு பரோல் நீட்டிப்பு செய்வது குறித்தும், பரோல் கேட்கும் கைதிகளின் குற்றத்தன்மையை ஆய்வு செய்து பரோல் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. வெளியில் இருந்து வரும் கைதிகளுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்’’ என்று தெரி வித்தார்.

SCROLL FOR NEXT