கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் இருவர் தனிமை வார்டில் அனுமதிக் கப்பட்டனர்.
சேலம் அரசு மருத்துவ மனையில், இந்தோனேஷியா நாட்டினர் உள்ளிட்ட 5 பேர் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது குழுவைச் சேர்ந்த மேலும் 11 பேர் அரசு மருத்துவ மனை தனிமை வார்டில் மருத்து வர்களின் கண்காணிப்பில் உள் ளனர்.
இந்நிலையில், இந்தோ னேஷிய நாட்டினருக்கு சமை யல் செய்து வழங்கிய சேலம் களரம்பட்டியைச் சேர்ந்த ஒருவர், வெளிமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் என இரு வரையும், சந்தேகத்தின் பேரில், சுகாதாரத் துறையினர் அரசு மருத்துவமனையின் தனிமை வார்டில் சேர்த்தனர். இவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, சேலத்தில் சூரமங்கலம் உழவர் சந்தை, பால் மார்க்கெட் தினசரி சந்தை ஆகியவை புதிய பேருந்து நிலையத்துக்கும், அஸ்தம்பட்டி உழவர் சந்தையானது, சிறைச் சாலை முனியப்பன் கோயில் வளாகத்துக்கும், அம்மாப் பேட்டை ஆற்றோர மார்க் கெட்டானது, தற்காலிக பழைய பேருந்து நிலையத்துக்கும், காந்தி மைதானத்தில் உள்ள காய்கறி சந்தை, செங்குந்தர் மேட்டு தெருவுக்கும், அம்மாப்பேட்டை உழவர் சந்தை, காமராஜர் காலனி முதல் தெருவுக்கும், கொண்டலாம்பட்டி உழவர் சந்தை, கொண்டலாம்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கும், கருங்கல்பட்டி மார்க்கெட்டானது, நம்பர்-4 மார்க்கெட் தெருவுக்கும், கொண்டலாம்பட்டி மார்க்கெட், பைபாஸில் உள்ள படையப்பா நகர் காலி இடத்திலும் இடமாற்றம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் இன்று (29-ம் தேதி) முதல் காய்கறி சந்தைகள் செயல்படத் தொடங்கும்.