கரோனா வைரஸ் முன்னெச் சரிக்கை நடவடிக்கையின்போது ஊரடங்கு உத்தரவை மீறி, சிலர்வெளியில் சுற்றுவதால் அத்தி யாவசியப் பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக வெளியில் செல்வோருக்கும் சிக்கல்ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள தைத் தொடர்ந்து, தமிழகத்தில் மாவட்டங்களின் எல்லைகள் சீல்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சிலர் வெளியில் சுற்றித் திரிவதால் காவல்துறையினர் அனைவரையும் தடுத்து நிறுத்தி தொந்தரவு செய் வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விதி களை மீறி வெளியில் சுற்றியது தொடர்பாக 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 41 பேர் கைது செய்யப்பட்டு, 13 மோட்டார் சைக்கிள் கள், ஒரு கார் ஆகியவை பறி முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் 752 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்கள் சுகாதாரத் துறையினரின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும், காவல்துறையினர் சிலருக்கு இலவசமாக முகக்கவசம்கொடுத்து உதவினாலும், காவல்துறையினருக்கே அதிக அளவில்முகக் கவசங்கள் தேவைப்படுகின்றன. அதனால் துறையினருக்கு முகக்கவசம் தயாரிக்க பயிற்சி அளிக்கவும், தெருவோரத்தில் இருப்போருக்கு உணவு வழங்க வும் எஸ்பி சாமுண்டீஸ்வரி நட வடிக்கை எடுத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 128 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 27 மோட்டார் சைக்கிள், 7 கார்கள் என 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம், படாளம், பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு வாகனங்கள் செல்வதைத் தடுக்க, வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.முக்கியப் பணிகளுக்காக செல்கிறார்களா என்பதை விசாரித்து மற்றவர்களைத் தடுக்க உத்தரவிட்டார்.அப்போது, சென்னையில் பணிமுடித்து விழுப்புரம் நோக்கிச்சென்ற 2 போலீஸார் ஹெல்மெட் அணியாமல் சென்றதால், அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 191வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 195 பேர் கைது செய்யப்பட்டு, 207 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆவடி மாநகராட்சி யில், அத்தியாவசிய பொருட்களைபொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில், 7 கடைகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். லாரிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும் மளிகை பொருட்கள் வாங்குவதாகக்கூறி பலர் மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிவதைத் தடுக்க இந்த மாவட்டங்களில் உள்ள சில சூப்பர் மார்க்கெட் கடைகள், வீட்டில் இருந்தபடியே தேவையான பொருட்களை ஆர்டர் செய்துபெற்றுக்கொள்ள, வாட்ஸ் அப் எண்களை வெளியிட்டுள்ளன.
மாமல்லபுரத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பேரூராட்சி செயல் அலுவலர் லதா தலைமையில்,தீயணைப்புத் துறை தண்ணீர் டேங்கர் மூலம் மாமல்லபுரம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள், சுற்றுலா வளாகங்கள் மற்றும் கலைச்சின்னங்களின் மீது கிருமிநாசினி தெளித்தனர்.மேலும்,சாலையோரங்களில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் முகக்கவசம் அணிவித்தனர்.நாள்தோறும் இவர்களுக்கு முகக்கவசம் மாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரி விக்கப்பட்டுள்ளது.