மங்களூரில் இருந்து ராமநாதபுரம் திரும்பிய 650 மீனவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் மங்களூரில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த, ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 650 மீனவர்கள் நேற்று 350 வேன்களில் ராமநாதபுரம் புறப்பட்டு வந்தனர்.
இவர்களை தமிழக எல்லையான ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சோதனைச் சாவடியில் இறக்கிவிட்டு கர்நாடக வேன்கள் திரும்பிச் சென்றன.
அதனால் 650 மீனவர்களும் சாலையில் அமர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதனையடுத்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அனுப்பாமல், சத்தியமங்கலத்திலேயே தனிமைப்படுத்த ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி முடிவு செய்துள்ளது.
அதனையடுத்து நேற்று மாலை ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறையினர் 650 மீனவர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.