அவசர காலங்களில் மருந்துப் பொருட்களை 70 கிமீ., தூரத்துக்கு எடுத்துச் செல்லக் கூடிய ஆளில்லா விமானத்தை உருவாக்கி அதனை இயக்கிக் காட்டும் திருச்செங்கோடு தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பினர். 
தமிழகம்

மருந்துகளை கொண்டு செல்ல ‘ட்ரோன் ஆம்புலன்ஸ்’ - தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பினர் சாதனை

கி.பார்த்திபன்

அவசர காலங்களில் மருந்துப் பொருட்களை கொண்டு செல்லக் கூடிய ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த நிறுவன தலைவர் ரவிக்குமார் கூறியதாவது:

அவசர காலங்களில் மருந்து பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல வசதியாக ஆளில்லா விமானத்தை வடிவமைத்துள்ளோம். இதில், உயிர்காக்கும் மருந்துகளை, குளிர்பதனம் செய்து அனுப்ப முடியும்.‘ஜிபிஆர்எஸ்’ மூலம் நாம் அனுப்ப நினைக்கும் இடத்துக்குவிமானத்தை அனுப்ப முடியும். ஒரு மணி நேரத்துக்கு 70 கிமீ., தூரத்துக்கு பறக்கக் கூடிய இந்த விமானம், 1 மணி நேரம் வரை இயங்கும் வகையில் இதன் பேட்டரி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆளில்லா விமானத்தை வடிவமைக்க ரூ.50 ஆயிரம் செலவு செய்துள்ளோம். இதில், மேலும் நவீன அமைப்புகளை ஏற்படுத்திட ரூ. 9 லட்சம் செலவாகும். இந்த விமானத்தை 24 மணி நேரத்துக்குள் தயார் செய்து கொடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT