முதல்வர் பழனிசாமிக்கு, மின்னஞ் சல் மூலம் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலை வர் கே.பி.முரளி விடுத்துள்ள கோரிக்கை கடிதம்:
பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் அத்தியாவசிய பொருட்களின் சேவையின்கீழ் வருவதால் மத்திய, மாநில அரசின் அறிவுறுத்தல்கள்படி தற்போது குறைந்தபட்ச ஊழியர்களுடன் 24 மணிநேரமும் பெட்ரோல், டீசல் விற்பனையை செய்து வருகின்றன.
தற்போதைய சூழலில் தனியார் வாகனங்களும் இருசக்கர வாகன ஓட்டிகளும் கட்டுப்பாடின்றி விற் பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப வந்து செல்கின்றனர். இவர்களது அஜாக்கிரதை போக் கால் நோய் தொற்று பரவுவதை தடுக்கவும் எங்கள் ஊழியர்களின் நலன் கருதியும் பொதுமக்களின் பொது பயன்பாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மடடுமே நடத்தும் வகையில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
பால், காய்கறி, அவசர ஊர்தி, அரசு சேவைகள் மற்றும் தாங் கள் வரையறுத்துள்ள பிற சேவை களின் பயன்பாட்டுக்கு மட்டும் 24 மணி நேரம் விற்பனை சேவையை பயன்படுத்த அறிவுறுத்தி உத்தர விட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.