தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்க, ஆங்கி லேயர் காலத்தில் இருந்த கூட்டுத் தண்டம் என்ற முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி யுள்ளார்.
கோவையில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்க, ஆங்கிலேயர் காலத்தில் இருந்த கூட்டுத்தண்டம் என்ற முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கூட்டாக வன்முறையில் ஈடுபடு பவர்கள் மீது கூட்டுத்தண்டம் முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உண்மை அறியும் குழு புகார்
இதற்கிடையே சேஷசமுத்திரம் சம்பவத்துக்கு போலீஸாரின் அலட்சியமே காரணம் என மதுரையை சேர்ந்த ‘எவிடன்ஸ் உண்மை கண்டறியும் குழு’ குற்றம் சாட்டியுள்ளது.
“கலவரம் நடக்க வாய்ப்புள்ள தாக ஊராட்சித் தலைவர் எச்சரித்தும் போலீஸார் அலட்சியமாக இருந்து பாதுகாப்பை பலப்படுத்தாமல் போனது கடும் கண்டனத்துக் குரியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்விதமான நிவாரணமும் அளிக்க வில்லை. இந்த செயல்களில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளி களும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்” என்று ‘எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட தாக்குதல்
தேசிய எஸ்சி, எஸ்டி ஆணைய இயக்குநர் பி.ராமசாமி தலைமையிலான ஒரு குழுவினர் சம்பவம் நடந்த சேஷசமுத்திரம் கிராமத்தை பார்வையிட்டனர்.
பின்னர் இயக்குநர் பி.ராமசாமி நிருபர்களிடம் கூறும்போது, “திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது நிரூபண மாகிறது. தலித் மக்களின் சமூக நிலையை உணர்ந்தே தாக்கு தல் நடைபெற்றுள்ளது. சேதப் படுத்தப்பட்ட 7 வீடுகளை சேர்ந்த வர்களை ஒன்றாக தங்க வைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கார்டு உள் ளிட்ட ஆவணங்கள் மீண்டும் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் உள்ள சட்டப்பிரிவுகளை இந்த சம்பவத்தில் போலீஸார் பயன்படுத்தி உள்ளனர். சேதமடைந்த வீடுகள் பற்றி இன்னமும் மதிப்பீடு செய்யப் படவில்லை” என்றார்.