திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1-வது மற்றும் 2-வதுஅணுஉலைகளில் மின் உற்பத்திநடந்து வருகிறது. 3, 4–வது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடமாநிலத் தொழிலாளர்கள் 5ஆயிரம் பேர் அணு உலை வளாகத்திலும், அருகிலுள்ள கிராமங்களிலும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வடமாநிலங்களில்இருந்து ரயில்கள் மூலமாக வருவதும் போவதுமாக இருந்தனர்.
மேலும் கூடங்குளம், ராதாபுரம், வள்ளியூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் உட்பட சுற்றுப்புற நகரப் பகுதிகளுக்கு அன்றாடம் தங்கு தடையின்றி சென்று வந்தனர். இவர்கள் மூலம் கரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மத்தியில் நிலவியது.
எனவே, கரோனா அச்சம் நீங்கும் வரையில் கூடங்குளம் அணுஉலைகளில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணி செய்வதையும், கட்டுமானப் பணிகளையும் நிறுத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
5 ஆயிரம் வடமாநில தொழிலாளர்
144 தடை உத்தரவு அமலுக்குவந்துள்ள நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலைகளுக்கான கட்டுமானப் பணிகளைவரும் 31-ம் தேதி வரை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபட்டிருந்த 5 ஆயிரம் வடமாநிலத் தொழிலாளர்களையும் அணுமின் நிலையவளாகத்தில் தங்கவைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.