தமிழகத்தில் கரோனாவைத் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இச்சூழலில் மதுரை நகரில் சட்டம், ஒழுங்கு பராமரிப்பதுடன், கரோவை வைரஸ் தொற்று தவிர்க்க, காவல்துறை சார்பில், சில நடைமுறையை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, காவல் நிலையங்கள், அலுவலகங்களுக்கு வரும் மனுதாரர்கள், பார்வையாளர்கள் தெர்மல் ஸ்கிரீனிங், தேவையான முன்னெச்சரிக்கைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள்.
காவல் நிலையம், அலுவலகங்களின் நுழைவுவாயில்களில் கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினிகள் ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மனுதாரர்கள், பார்வையாளர்களுக்கென ஒதுக்கிய இடங்களில் மட்டுமே அமரவேண்டும். அலுவலகங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மனுதாரர், பாரவையாளர்கள் யாருக்கேனும் இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். முக்கிய கூட்டம், தவிர பிற கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுளளது. தபால்கள் அனைத்தும் அலுவலக வாயில்களில் பெறுவதும், வழங்குவதும் பின்பற்றப்படுகிறது.
காவல்துறை சார்பில், நகரின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்படுகிறது. காவலர்களுக்கான பாய்ஸ் கிளப், உடற்பயிற்சி கூடம், கல்யாண மண்டபம் மூடப்பட்டுள்ளது.
காவல் துறையினரின் குடும்பங்களுக்கு இந்த வைரஸ் பரவாமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா பற்றிய உதவிக்கு சிறப்பு கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
044-29510400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும், இது போன்ற நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.