அஞ்சல் துறை மூலம் வெளிநாடு களில் இருந்து பார்சல்களை பெற்று விநியோகிக்கும் ‘கார்கோ’ சேவை உள்ளது. அதன் படி, வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பார்சல்கள் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட தலைமை அஞ்சல் நிலையங் களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் துணை அஞ்சல் நிலை யங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கோவையில் உள்ள சில அஞ்சல் நிலையங்களுக்கு சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் இருந்து பார்சல்கள் வந்துள்ளதால், கரோனா அச்சம் காரணமாக அதை பெற்றுக்கொள்ள சம்பந் தப்பட்டவர்கள் தயக்கம் காட்டி னர்.
இது தொடர்பாக முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுதிர் கோபால் ஜாகரேவிடம் கேட்டதற்கு, “வெளி நாடுகளுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டவுடன் பார்சல் வரு வதும் நின்றுவிட்டது. நாங்களும் வெளிநாடுகளுக்கு புக்கிங் செய்வதை நிறுத்திவிட்டோம். தற்போது வந்துள்ள பார்சல்கள் 10 நாட்களுக்கு முன்பு வந்ததாக இருக்கலாம். எனினும், இனிமேல் எந்த பார்சலும் விநியோகிக்கப் படாது” என்றார்.