தமிழகம்

கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு மலேரியா மாத்திரையுடன் கூட்டு மருந்து சிகிச்சை

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதித்தவர் களுக்கு மலேரியாவுக்கு கொடுக்கப்படும் மாத்திரையுடன் கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 9 பேர் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவர் குணமடைந்த நிலையில், மீதமுள்ள 8 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அறிகுறிக்கு ஏற்ப மருந்து

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சலுக்குபாராசிட்டமால், தொண்டைவலிக்கு அசித்ரோமைசின், இருமலுக்கு டெக்ஸ்ரோமெத்தோ பான், சளிக்கு, நெப்ராக்சிங், அலர்ஜி போன்றவற்றுக்கு குளோர்பெனிரமைன் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிக்கு ஏற்ப மருந்துகள் வழங்கப்படுகின்றன.

ஹைட்ராக்சி குளோரோகுயின்

தமிழகத்தில் முதலில் கரோனாவைரஸ் உறுதி செய்யப்பட்ட காஞ்சிபுரம் பொறியாளருக்கு இந்த கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சிகிச்சையில் தற்போது மத்திய அரசு பரிந்துரைத்துள்ள ‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ மாத்திரை கொண்டும் சிகிச்சை அளிக்கப் படுகிறது. இந்த மாத்திரை மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது” என்றனர்.

SCROLL FOR NEXT