தமிழகம்

குடும்பத்தினரையும், குழந்தைகளையும் சந்திக்கும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள்: கரோனா வீரியத்தை உணராமல் பிடிவாதம்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் கரோனாவின் தீவிரத்தை உணராமல் உறவினர்களுடன் பேசிப் பழகுவது நோய் தொற்றுக்கு வழி செய்யும் அபாயகரமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, துபாயிலிருந்து டெல்லி வந்த மூன்று பயணிகள், மற்றும் அமெரிக்காவிலிந்து டெல்லி வந்த ஒருவர் உள்பட 4 பேர் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர். இவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களுக்கு இடது கை மணி கட்டு உள்பட இரு இடங்ளில் முத்திரை பதித்து 14 நாட்கள் சின்ன உடைப்பு தனிமை முகாமுக்கு சுகாதாத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

தற்போது உள்ள சூழ்நிலையில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் இவர்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம்
14 நாட்கள் தனிமை முகாம் செல்ல அறிவுருத்தப்பட்டுள்ளது.

மருத்துவர் சிவகுமார் தலைமையில் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் பயணிகள் விமான நிலையத்திற்கு வெளியில் வந்ததும் குடும்பத்தினரை சந்தித்து பேசுகின்றனர். அதுவும் கரோனா வைரஸ் விழிப்புணர்வு இல்லாமல் குழந்தைகளுடன் வந்து பேசுகின்றனர். இதனால் தொற்று பரவும் அபாயம் இருப்பதை உணர மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா அச்சுறுத்தலை இன்னும் அரசு தீவிரமாகவும் பொறுப்புடனும் மக்கள் அணுகவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதை நிரூபிக்கும் வகையில் தான் வெளிநாடுகளில் இருந்து மதுரை விமான நிலையம் வரும் பயணிகள் பெரும்பாலோனோரின் நடவடிக்கைகளும் உள்ளது.

SCROLL FOR NEXT