சென்னை அண்ணாசாலை சிம்சன் சிக்னலில் இருந்து எல்ஐசி, மறுபுறம் ஜெமினி மேம்பாலம் என இருபுறமும் வெறிச்சோடிய சாலை
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு ஊரடங்கு முழுமையாகக் கடைபிடிக்கப்பட்டது. தலைநகர் சென்னையில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.மெரினா கலங்கரை விளக்கம்அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் பன்னோக்கு மருத்துவமனை - வாலாஜா சந்திப்புவெறிச்சோடிக் காணப்படும் தாம்பரம் ரயில் நிலையம்கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறையைச் சேர்ந்தவர்களுக்கும் கைதட்டி நன்றி தெரிவிக்கும்படி பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதன்படி சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று குடும்பத்தினருடன் கைதட்டி நன்றி தெரிவித்த முதல்வர் பழனிசாமி. உடன் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பொ.சங்கர் உள்ளிட்டோர்.