இது கோப்புப் படம். 
தமிழகம்

சென்னை, மதுரை உட்பட தமிழகத்தில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸுக்கு இந்தியாவில் சுமார் 380 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று ஊரடங்கை காலை 5 மணி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மக்களின் நலன் கருதி ஊரடங்கு நிகழ்வு 23-ந்தேதி காலை 5 மணி வரை தொடரும்” கூறப்பட்டிருந்தது. இதன்படி இன்று காலை 5 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

அதிகாலை 5 மணிக்குப் பிறகு, சென்னை, மதுரை உள்பட தமிழகத்தில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. எனினும், வழக்கம் போல் இல்லாமல் தேவைக்கேற்ப குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட நகரங்களில் டீக்கடைகள், பெட்டிக்கடைகள் திறந்துள்ளன.

SCROLL FOR NEXT