தமிழகம்

தாலிக்கு தங்கம் திட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு 762 பவுன், ரூ.4 ஆயிரம் கோடி உதவித் தொகை: சட்டப்பேரவையில் சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா விளக்கம்

செய்திப்பிரிவு

தாலிக்கு தங்கம் திட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 12.50 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,793 கோடியில் 6,100 கிராம் தங்கம், ரூ.4,371 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் சமூகநலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் கீதா ஜீவன் பேசியதாவது:

திருமண உதவித் தொகை உரிய காலத்தில்தான் வழங்கப்பட் டால்தான் அத்திட்டத்தின் நோக் கமே நிறைவேறும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த திட்டம் என்பதாலோ என்னவோ, அரசு இதில் அக்கறை காட்டுவது இல்லை.

மூவலூர் ராமாமிர்தம் அம்மை யார் திட்டத்தின் கீழ், கடந்த 2017 வரை திருமணமானவர்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி திருமணம் செய்பவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது இவ்வளவு தாமதமானால், வட் டிக்கே அந்த தொகை போய்விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரியும் மானியக் கோரிக்கை உரையின் போது இதே கருத்தை வலியுறுத் தினார்.

இதற்கு பதில் அளித்து சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா பேசியதாவது:

திருமண உதவித் தொகை திட்டத்தை கொண்டுவந்தது திமுக அரசு. ஆனால், திருமண உதவித் திட்டத்தில் 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போதுதான் தாலிக்கு தங்கம் திட்டம் அறிவிக்கப்பட்டது. பட்டம், பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரம் உதவித் தொகையும், பட்டயப் படிப்புக்கு கீழ் படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கம், ரூ.25 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

8 கிராமாக உயர்த்தி...

திருமண நிதியுதவி திட்டத்தில் வழங்கப்படும் தங்கத்தை 8 கிரா மாக உயர்த்தி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ல் உத்தர விட்டு, திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

கடந்த 2011 முதல் இந்த ஆண்டு வரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 503 பட்டதாரிகள், 7 லட்சத்து 18 ஆயிரத்து 150 பட்டதாரி அல்லாதவர்கள் என மொத்தம் 12 லட்சத்து 50 ஆயிரத்து 653 பேருக்கு ரூ.1,793 கோடியில் 6,100 கிராம் தங்கம் (762.5 பவுன்), ரூ.4,371 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

40 நாள் முன்பு விண்ணப்பம்

இத்திட்டத்தில் பயன்பெற, திருமண தேதிக்கு 40 நாட் களுக்கு முன்பு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். உரிய வருவாய், கல்வி சான்றிதழ்களை இணைத்தால்தான் விண்ணப்பம் ஏற்கப்படும். குறைபாடுகள் இருந் தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படும்.

5 வகையான திருமண நிதி யுதவி திட்டங்களில் சில விதி முறைகள் திருத்தப்பட்டுள்ளன. இத்திட்டங்களில் வயது வரம்பு இல்லை. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தில் மட்டும் 10-ம் வகுப்பு கல்வித் தகுதி நிர் ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து பயனாளி களிடம் பேரவை உறுப்பினர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சரோஜா கூறினார்.

SCROLL FOR NEXT