மக்கள் ஊரடங்கு நடைபெறும் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் பெட்ரோல் பங்க்குகள் திறந்திருக்கும்.
இதுகுறித்து, தமிழகம் மற்றும் புதுவைக்கான மாநில அளவிலான எண்ணெய் நிறுவனங்களின் ஒருங் கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ள தாவது: கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்காக இன்று (22-ம் தேதி) மக்கள் ஊரடங்கு உத்தரவு நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் திறந்திருக்கும்.
எனினும், குறைந்த அளவே ஊழியர்கள் பணிபுரிவர். எனவே, அவசர மற்றும் அத்தியாவசியத் தேவைக்காக இயக்கப்படும் வாகனங்கள் மட்டும் இந்த ஊரடங்கு சமயத்தில் பெட்ரோல், டீசல் நிரப்பப்படும். பிற வாகனங்கள் இந்த ஊரடங்கு நடைபெறும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எரிபொருள் நிரப்புவதைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம், இந்த ஊரடங்குக்கு வாகன ஓட்டிகள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.