சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள தேர்தல் செலவுகள் பற்றிய அறிக்கையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முதல்வர் ஜெயலலிதா செலவிட்ட தொகை ரூ.10.37 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது.
வேட்பாளரின் தேர்தல் நிதி மற்றும் செலவினங்கள் பற்றிய இந்த விவரங்களில் ரூ.3.15 லட்சம் தொகை மேடை அமைப்பு, பந்தல், இருக்கைகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றுக்கு செலவிடப்பட்டுள்ளது.
இதைத் தவிர அலங்கார வளைவுகள், தடுப்பரண்கள், மலர்கள், மலர்மாலைகள், புரொஜெக்டர் காட்சிகள், 3டி காட்சிகள், பிரபலங்களின் லாட்ஜ் செலவுகள் போன்றவை இந்த செலவினங்களில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் ரூ.5.19 லட்சம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக செலவிட்டுள்ளார். இதில் ரூ.56,500 பரிசாகவோ, அன்பளிப்பாகவோ, கடனாகவோ வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.