சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலைய உள் நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங் களுக்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாது காப்பு நடைமுறைகள், வரும் 20-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
விமான நிலைய போலீசார், மத்திய தொழிற்படையினர், பாது காப்பு படையினர் 24 மணி நேர மும் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர் கள் மோப்ப நாயுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விமான நிலையத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையத்திற்கு வரும் பயணி கள், நுழைவு பகுதியில் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப் படுகின்றனர். வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக் கப்படுகின்றன. பாதுகாப்பு நடை முறைகள் அமலில் இருப்பதால் விமான நிலையத்துக்குள் செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.