மத்திய அரசின் மண்டல புற்றுநோய் மையங்கள் தமிழகத்தில் அமைய உள்ளன என்று சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார் தெரிவித்தார்.
இந்தியன் வங்கி (வடக்கு மண்டலம்) சார்பில் பெண்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந்தது. இந்தியன் வங்கி (அண்ணாசாலை) கூடுதல் பொது மேலாளர் மகேஷ்குமார் முகாமுக்கு தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை சிறப்புச் செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார் முகாமை தொடங்கி வைத்து பேசும்போது, “தொற்றா நோய்களுக்கான பதிவேடுகளை தமிழக அரசு சிறந்த முறையில் பராமரித்து வருகிறது. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம். மத்திய அரசின் சார்பில் மண்டல புற்றுநோய் மையங்கள் தமிழகத்தில் சில இடங்களில் அமைய உள்ளன. அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கு நிதியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது” என்றார்.
இந்த முகாமில் இந்தியன் வங்கி சார்பில் மருத்துவமனை பயன்பாட்டுக்காக ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொலிரோ கார் வழங்கப்பட்டது.