‘எனது மரணத்துக்காக விடுமுறை அளிக்கக்கூடாது, அதற்குப் பதிலாக என்னை நேசிப்பவர்கள் கூடுதலாக ஒருநாள் பணியாற்றலாம்’ என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியிருந்தார்.
இதை ஏற்று கேரள அரசு ஊழி யர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பணியாற்றினர். திருவனந்தபுரம் ஆட்சியர் அலுவல கத்தில் 80 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். மலப்புரம், ஆலப்புழை, எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் நேற்று வழக்கம் போல் செயல்பட்டன.
இதேபோல கேரளாவின் பல் வேறு அரசு அலுவலகங்கள், பஞ் சாயத்து ஊழியர்கள் நேற்று விடு முறை நாளில் பணியாற்றி மறைந்த தலைவர் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தினர்.