விமானத்தில் திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ தங்கம், ரூ.6 லட்சம் மதிப்பி லான வெளிநாட்டு மதுபாட்டில் கள், சிகரெட் பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிங்கப்பூரில் இருந்து சென்னை வழியாக நேற்று அதிகாலை திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சுங்க ஆணையர் ஜானி உத்தரவின்பேரில், இணை ஆணையர் வெங்கடே சன், உதவி ஆணையர் முத்து கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் அந்த விமானத்தில் வந்த அனைவரையும் சோத னைக்கு உட்படுத்தினர்.
அப்போது 17 பேரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பு டைய 93 வெளிநாட்டு மது பாட்டில்கள், 208 சிகரெட் பண் டல்கள் பறிமுதல் செய்யப் பட்டன. மேலும், சென்னை யைச் சேர்ந்த ஷேக்முகமது, அருண் அப்பாஸ், யுவராஜ் ஆகியோர் கொண்டு வந்த பெட்டிகளுக் குள் 2.047 கிராம் தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, மூவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர விமான நிலையத் தில் உள்ள பயணிகளுக்கான கழிப்பிடத்தில் இருந்து மேலும் சுமார் 1.6 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். இதனை அங்கு வைத்து விட் டுத் தப்பியவர்கள் யார் எனத் தெரியவில்லை.
உள்நாட்டு விமானத்தில்..
கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் குறித்து சுங்க அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக வெளிநாடுகளில் இருந்து வரும் (சர்வதேச) விமானங்களில் பயணிப் போரிடம் சுங்க சோதனை நடத்தப்படும். ஆனால், சென் னையில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமானத்தில் வரும் பயணி களை சோதனையிடுவ தில்லை. இதை இக்கும்பல் தங்களது கடத்தல் தொழி லுக்கு சாதகமாக பயன்படுத்தி யுள்ளனர்.
அதாவது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வாரந் தோறும் திங்கள், செவ்வாய், சனிக்கிழமைகளில் மட்டும், சிங்கப்பூரில் இருந்து சர்வ தேச விமானமாக சென் னைக்கு வரும். அங்கு சுங்கச் சோதனை நடத்தப்படும். பின்னர் அங்கிருந்து உள் நாட்டு விமானமாக மாற்றப் பட்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு அதிகாலை 2.35 மணிக்கு திருச்சி வரும். இதில் வருவோரிடம் சுங்கச் சோதனை நடத்தப்பட மாட் டாது. எனவே, இதை பயன் படுத்தி சிங்கப்பூரில் இருந்து சிலர் தங்கம் உள்ளிட்ட பொருட் களை விமானத்தில் கடத்தி வந்துள்ளனர். சென்னையில் இறங்கி எடுத்துச் சென்றால் சுங்கச்சோதனையில் சிக்கி விடுவோம் என்பதால், தங்கள் இருக்கையிலேயே வைத்துவிட்டு விமானத்தில் இருந்து இறங்கியுள்ளனர். பின்னர் அதே கும்பலைச் சேர்ந் தவர்கள் இந்த விமானத்தில் ஏறி, கடத்தல் பொருட்களை எடுத்துக்கொண்டு சென்னை யில் இருந்து திருச்சிக்கு உள்நாட்டு பயணியாக வந் துள்ளனர்.
இங்கு சுங்கச் சோதனை இருக்காது என்பதால் எளிதில் வெளியே கொண்டுவந்து விடலாம் என திட்டமிட்டிருந் தனர். ஆனால், இக்கடத்தல் பற்றி முன்கூட்டியே எங்க ளுக்கு தகவல் தெரிந்துவிட் டதால், சோதனை நடத்தி அனைவரையும் பிடித்து விட்டோம் என்றனர்.