தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங் கானா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு யூனியன் பிரதேசங்க ளுக்காக சென்னையில் மார்ச் 18 முதல் செயல்படவிருந்த தேசிய நிறு வன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தின் திறப்புவிழா, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால் திடீ ரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நிதி தொடர்பான பிரச்சினை கள், ஒப்பந்தங்கள், பங்குதாரர்கள் மற்றும் கடன்களுக்கு பரஸ்பர சமரச தீர்வு காண்பதற்காக கம்பெனிகள் சட்டம்-2013 பிரகாரம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள் நாடு முழுவதும் கடந்த 2016-ல் தொடங்கப்பட்டன.
16 அமர்வுகள்
அதன்படி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் 16 அமர்வுகள் தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்பாயங்களில் நீதித்துறை உறுப்பினராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும், தொழில்நுட்ப உறுப்பினராக இந்திய கார்ப்பரேட் சட்ட அறிவு பெற்ற ஓய்வுபெற்ற அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பாயங்கள் பிறப்பிக்கும் தீர்ப்புகளை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்து தீர்வு காண முடியும். மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பிக்கும் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு தொடர முடியும்.
கிட்டத்தட்ட உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பைப் பெற்றுள்ள இந்த தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் கிளை, சென்னையில் அமைக்கப்பட வேண்டும் என்பது தென்மாநிலங்களில் உள்ள நிறுவ னங்கள் மற்றும் கம்பெனி சட்டத் தில் நிபுணத்துவம் பெற்ற வழக் கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், நிதி ஆலோசகர்கள் போன்றோரின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் பலர் புதுடெல்லியில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பா யத்தின் தலைவராக பதவி வகித்த ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜெ.முகோ பாத்யாவை நேரில் சந்தித்து வலி யுறுத்தியதுடன், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததன் பலனாக தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் கிளை சென்னையில் மார்ச் 18 முதல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது.
குறளகத்தில் இடம்
அதன்படி சென்னை குறளகத் தில் இதற்கென இடம் ஒதுக்கப் பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப் பட்டது. ஆனால் எந்தவொரு உள்கட்ட மைப்பு வசதிகளையும் மத்திய அரசு செய்யவில்லை. இதனால் மார்ச் 18 அன்று நடைபெறவிருந்த திறப்பு விழா நிறுத்தப்பட்டு, ஜூன் மாதத் துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், கம்பெனிகள் சட்ட நிபுணருமான இ.ஓம்பிரகாஷ் கூறியதாவது:
தேசிய நிறுவன சட்ட மேல்முறை யீட்டு தீர்ப்பாயம் தற்போது டெல் லியில் மட்டும் உள்ளது. இதனால், கால விரயம், பொருள் விரயம் மற்றும் வழக்குகளின் தேக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங் கானா, கர்நாடகா ஆகிய 5 மாநி லங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத் தீவு ஆகிய யூனியன் பிரதேசங் களுக்காக தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் கிளையை சென்னையில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டோம்.
அதன் பலனாக சென்னையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மார்ச் 18-ம் தேதி முதல் செயல்படும் என மத்திய அரசும் தேதி குறித்தது. அதன்படி டெல்லியில் உள்ள வழக்குகள் சென்னைக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு நீதித் துறை மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக் கப்பட்டது.
இந்நிலையில், எந்தவொரு உள் கட்டமைப்பு வசதிகளும் செய்யப் படவில்லை. இதற்கு 2 மாதங்கள் ஆகும் எனக் கூறி இதன் திறப்புவிழா ஜூன் மாதத்துக்கு திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை குறளகத்தில் இதற் கான இடம் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுவிட்ட நிலையில், தேவையான உறுப்பினர் கள் மற்றும் அலுவலக ஊழியர்களை நியமித்து விரைவில் இதை செயல் பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.