கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் மதுரை காவல்துறை அலுவலகங்களில் மக்கள் அதிகமாக கூடுவதற்கு கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை நகரில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க, வழக்கமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையின்றி கூடவேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுத் துறை அலுவலகங்களுக்கு அவசர அலுவல், தேவையின் அடிப் படையில் மட்டும் செல்லவேண்டும். காவல் நிலையங்களில் புகார் கொடுக்க, செல்வோர் கூடுதல் நபர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்றெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
மதுரை நகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அலுவலர்கள் தவிர, பொதுமக்கள் அதிகமாக செல்வதை தவிர்க்கவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அலுவலக வாசலில் நிறுத்தப்பட்டுள்ள போலீஸார் அலுவல் காரணமாக செல்லும் நபர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
தேவையின்றி யாரையும் உள்ளே அனுப்புவதில்லை. காவல் ஆணையர் அல்லது காவல்துறை அதிகாரிகளிடம் நேரில் புகார் கொடுக்கச் செல்லும் போது, ஒருவர் மட்டுமே செல்லவேண்டும். கூடுதல் நபர்களை தடுத்து, அறிவுரைகள் கூறி அனுப்புகின்றனர். இது போன்ற காரணத்தால் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அலுவல் நிமித்தமாக செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை காவல் கண்காணிப்பாளர், தென்மண்டல ஐஜி அலுவலகத்திலும் தினமும் புகார் கொடுக்க வரு வரை வரவேற்பு பகுதியில் நிறுத்தி மனுக் களை பெறப்படு கின்றன.
அவசியமான புகார் எனில், தனிப்பிரிவு அதிகாரி களிடம் கேட்டு, அனுப்புகின்றனர். இந்த நடைமுறையால் அனைத்து காவல் நிலையம், காவல்துறை அலுவலகங்களில் பொதுமக்களின் கூடுகை குறைக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு சாதனங்களும் காவல்துறை அலுவல கங்களில் வைக்கப் பட்டுள்ளன.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பொது மக்களும் சில நாட்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு தரவேண்டும் என, காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
காவல் துறையில் இது போன்ற அறிவுரையால் மதுரையில் வழக்கத்தைவிட பொதுமக்களின் வருகை குறைந்துள்ளது என, போலீஸார் தெரிவிக்கின்றனர்.