கரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் ரஜினி மக்கள் மன்றம் ரசிகர்கள் சார்பாக கை கழுவ தண்ணீர் தொட்டி அமைத்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
சில தனியார் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் நோய் தொற்றிடமிருந்து தற்காத்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மதுரை மாவட்ட துணை செயலாளர்கள் அழகர், பால்பாண்டி ஆகியோர் தலைமையில் ரஜினி ரசிகர்கள், கரோனா தொற்று தாக்கதவாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதற்கு எப்போதும் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் நிமித்தமாக பொதுமக்கள் கை கழுவுவதற்கு தண்ணீர் தொட்டி அமைத்து பொதுமக்களிடையே கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய துண்டு பிரசாதத்தை வழங்கினர்
.
இது தொடர்பாக, ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பால்பாண்டி கூறுகையில் "ரஜினிகாந்த் உத்தரவின் பேரில் ரஜினி மக்கள் மன்றம் கரோனா விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம், கை கழுவும்போது சோப்பு கரைசல் பயன்படுத்துவது குறித்தும், முக கவசம் அணிய வலியுருத்தியும் பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தி வருகிறோம்ம்" என்றார்.
முன்னதாக தமிழக அரசு எடுத்துள்ள கரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து ரஜினிகாந்த் ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கரோனாவால் பாதிக்கப்படும் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு உதவ வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்.