கரோனா அச்சுறுத்தலால் வரும் மார்ச் 22-ம் தேதி மதுரை அழகர்கோயிலில் நடைபெறவிருந்த கிடா வெட்டி முடி இறக்கும் குடும்ப நிகழ்ச்சியை ரத்து செய்தார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று 3 பேருக்கு உறுதியாகியுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள், பெரிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதுரையில் நடைபெறவிருந்த தங்களின் இல்ல விழா ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார்.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் பேரனுக்கு வரும் 22-ம் தேதி மதுரை அழகர்கோயில் முடி இறக்கி கிடா வெட்டும் நிகழ்ச்சி நடத்த ஏற்ப்பாடுகள் நடைபெற்ற நிலையில் கரோனா வைரஸ் தொற்று எதிரொலி காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பதாக அவர் விளக்கினார்.
கரோனா வைரஸுக்கு இதுவரை உலகம் முழுவதும் 10,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 4 பேர் பலியான நிலையில் 206 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.