தமிழகம்

கூலித் தொழிலாளர்களுக்கு உணவளிப்பது சமூகப் பொறுப்பு: ஈஷா சத்குரு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் அச்சுறுத்த லால் வேலையிழந்து தவிக்கும் தினக் கூலித்தொழிலாளர்களுக்கு உணவு அளிக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பு என்று, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டர் பதிவு மூலமாக அவர் தெரிவித் திருப்பதாவது:

கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலால், உலகம் முழுவதும் பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளது. விமானப் போக்குவரத்து, பயணம் மற்றும் சுற்றுலா சார்ந்த பெரும் தொழில்கள் பாதிக்கப் பட்டுள்ளன. இத்தகைய சூழலில், அதிகம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் முக்கியப் பிரிவினரான தினக் கூலித் தொழிலாளர்கள் மீது உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பல நாட்களாக தொடர்ந்து வேலை யிழந்து தவிக்கும் இவர் களுக்கு, ஊட்டச்சத்துமிக்க உணவு தினமும் வழங்கப்பட வேண்டும்.

உணவின்றி அவதியுறுவது உள்நாட்டு சண்டைகளுக்கும், இறப்புகளுக்கும் வழிவகுக்கும். அவர்களுக்கு தினசரி உணவையேனும் வழங்குவது, இந்த சமூகத்தின் பொறுப்பு. அனைவரும் ஒன்று சேர்ந்து, கரோனா வைரஸ் பரவுவதை முறியடிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT