தமிழகம்

வரி செலுத்த கால அவகாசம் அளிக்குமாறு ஜிஎஸ்டி கவுன்சிலிடம் வலியுறுத்துவோம்: அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி

செய்திப்பிரிவு

பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ‘‘வணிக நிறுவனங்கள்,மால்கள், திரையரங்குகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்கள், மூடப்பட்டுள்ளன. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. இது மார்ச் மாதம் என்பதால் வரி கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வரிச் சலுகை அளிக்கவும், வரிகள் கட்ட 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்’’ என்று வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.சி.வீரமணி, ‘‘மால்கள், திரையரங்குகள், மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் போன்றவைதான் மூடப்பட்டுள்ளன. குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மூடப்படவில்லை. வரிச் சலுகைகள் வழங்குவது, வரிகள் கட்ட கால அவகாசம் வழங்குவது போன்றவை ஜிஎஸ்டி கவுன்சிலின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே, இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சிலிடமும், மத்திய அரசிடமும் தமிழக அரசு வலியுறுத்தும்’’ என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT