தமிழகம்

பட்டினப்பாக்கம் – பெசன்ட் நகரை இணைக்கும் கடற்கரை சாலை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்தி, நடைபாதைவியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்கைவிசாரித்த உயர் நீதிமன்றம், புயலால் சேதமடைந்த பட்டினப்பாக்கம் லூப் சாலை முதல் பெசன்ட் நகர்வரை உள்ள கடற்கரை சாலையைமீண்டும் சீரமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்துமாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த சாலையை சீரமைக்க முடியும் என்றும் ஆனால் அதற்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி தேவை என்றும் அறிக்கைதாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர்அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில்கூடுதல் தலைமை வழக்கறிஞர்எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகிவிளக்கமளித்தார். அதையடுத்து நீதிபதிகள், பட்டினப்பாக்கம் – பெசன்ட்நகரை இணைக்கும் கடற்கரை சாலையை மீண்டும் அமைப்பது தொடர்பான திட்ட அறிக்கையை மாநகராட்சி 4 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 20-க்குதள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT