தமிழகம்

ஹாட் லீக்ஸ்: பாலு சார்... பாத்து செய்யுங்க சார்!

செய்திப்பிரிவு

பாராளுமன்றத்தில் அதிமுகவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அலுவலக அறை காலி செய்யப்பட்டு திமுக வசம் ஒப்படைக்கப் பட்டுவிட்டது. திமுகவின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு இந்த அலுவலகத்தை தனது பொறுப்பில் எடுத்ததுமே, “திமுக எம்பி-க்கள் அத்தனை பேரும் இந்த அலுவலகத்தின் நிர்வாக செலவினங்களுக்காக ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் தந்துவிடவேண்டும்” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம். இந்த அலுவலகம் அதிமுக வசம் இருந்தபோது அதன் அலுவலர்கள் மூன்று பேருக்கும் சென்னை தலைமைக் கழகத்திலிருந்தே ஊதியம் வந்து சேருமாம். அதுபோக இதர செலவினங்களுக்காக ஒவ்வொரு எம்பி-யும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுப்பார்களாம். அப்படியிருக்க நம்மிடம் மட்டும் இம்புட்டுப் பெரிய தொகையைக் கேட்டால் எப்படி என திமுக எம்பி-க்களில் சிலர் பொருமுகிறார்களாம்.

- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 22, 2020)

SCROLL FOR NEXT