மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் சானிட்டைசர் என்ற ‘கிருமி நாசினி’ மூலம் கை கழுவியப்பிறகே பொதுமக்கள், அனுமதிக்கப்படுகின்றனர்.
‘கோவிட்-19’ வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் சுற்றுலா தலங்கள், மால்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.
கோயில்கள், அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்கள் வரக்கூடாது என்று அரசு உத்தரவிடவில்லை.
அதனால், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நுழைவு வாயில் முதல் கோயில் வளாகம் முழுவதும் ‘கிருமி நாசினி’ தெளிக்கப்பட்டது. கோயில் நுழைவு வாயிலில் பக்தர்கள் சானிடைசர் என்ற ‘கிருமி நாசினி’ மூலம் கைகளைக் கழுவியப்பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
நோய் அறிகுறியிருக்கும் பக்தர்களை, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கோவிட்-19 வைரஸ் பரவுவதால் மீனாட்சியம்மன் கோயிலுக்கு 50 சதவீதம் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள், அலுவலக நுழைவு வாயிலில் சானிட்டைசர் என்ற ‘கிருமி நாசினி’ மூலம் கைகளைக் கழுவியப்பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘கிருமி நாசினி’ மூலம் கைகளைக் கழுவிய பிறகே பொதுமக்களை அனுமதிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது.