சிவகங்கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் சிலர் தேசியக் கொடியுடன் தெப்பக்குளத்தில் இறங்கி போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் இன்று மாநிலம் தழுவிய சிறைநி ரப்பும் போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக சிவகங்கை அரண்மனைவாசலில் நடந்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அவர்கள் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் திடீரென தேசியக் கொடியுடன் இறங்கி நுதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீஸார் சமரசம் செய்து வெளியே அழைத்து வந்தனர். இளைஞர்களின் இந்த திடீர் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.