புகழேந்தி 
தமிழகம்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்: பெங்களூரு புகழேந்தி கருத்து

செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று பெங்களூரு புகழேந்தி கூறினார்.

அமமுகவில் இருந்து விலகி,அதிமுகவில் இணைந்துள்ள பெங்களூரு புகழேந்தி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தினகரன் புதிய கதை

டிடிவி தினகரன், எதையுமே சாதிக்கவில்லை. அவரைப் பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். தற்போது கூட்டணி என்ற புதிய கதையை பரப்பிக் கொண்டிருக்கிறார். அவர்தமிழக அரசியலில் ஆபத்தானவர். அவரை யாருமே சேர்க்கமாட்டார்கள். அமமுக ஏற்கெனவே காலியான கூடாரம்போலாகிவிட்டது.

அதேபோல, சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தாலும், தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஓய்வெடுப்பது, சொந்தவேலைகளில் மட்டுமே ஈடுபடுவார்.

தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதைத்தான் நடிகர் ரஜினிகாந்த் சூசகமாகத் தெரிவித்துள்ளார். இதுவரை அரசியலுக்கு வராத ரஜினிகாந்த், இனியும் வரப்போவதில்லை என்பதுதான் எதார்த்தம்.

முதல்வருக்கு பாராட்டு

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி மிகச் சிறப்பாக செயல்படுகிறது. மக்களுக்கான நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதுடன், கோவிட்-19 வைரஸ் தாக்குதல், குடியுரிமை சட்டப் போராட்டம் என அனைத்தையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கின்றனர்.

அதிமுகவில் எந்தப் பதவியையும் எதிர்பார்த்து நான்சேரவில்லை. ஏதாவது பொறுப்பு வழங்கினால் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வேன்.

இவ்வாறு புகழேந்தி கூறினார்.

SCROLL FOR NEXT