தமிழகம்

சென்னை ஆயிரம் விளக்கில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வாகன நிறுத்தம் விரைவில் தொடக்கம்: சோதனை காலத்தில் வாகனங்களுக்கு இலவச அனுமதி

செய்திப்பிரிவு

சென்னையில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள முதல் அடுக்குமாடி வாகன நிறுத்தம் விரைவில் பொதுமக்கள் பயன் பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. தொடக்கத்தில் இங்கு இலவசமாக வாகனங்களை நிறுத்த அனுமதிக் கப்படும்.

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப் போலோ மருத்துவமனை அருகே வாலஸ் தோட்டம் சாலையில் மாநகராட்சி சார்பில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையுடனான ஒப்பந்தத்தின் மூலம் கட்டப்படுள்ள இந்த நிறுத்தத்தில் 250 கார்களும் 238 இரு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 7 தளங்களில் கார்களும் ஒரு தளத்தில் இரு சக்கர வாகனங்களும் நிறுத்தப்படும். தரைதளத்தில் வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு டோக்கன் பெற்றுக்கொள்ள வேண் டும். வாகனங்கள் மின் தூக்கிகள் மூலம் மேல் தளங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

தற்போது கட்டுமானப் பணிகள் முடிந்தவிட்ட நிலையில், சோதனை முறையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்த அனுமதிக்கப்படுகின்றன. சோதனை காலம் முடியும் வரை பொதுமக்கள் வாக னங்கனை இலவசமாக நிறுத் திக்கொள்ளலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் அல்லது அக்டோபரில் வாகன நிறுத்தம் முழுமையாக செயல்பட தொடங்கிய பிறகு கட்டணம் வசூலிக்கப்படும். இதிலிருந்து வரும் வருமானத்தில் ஒரு பகுதி மாநகராட்சிக்கு அளிக்கப்படும்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “செப்டம்பர் அல்லது அக்டோபரில் வாகன நிறுத்தம் திறக்கப்படும். வாகனங்களுக்கான கட்டணம் விரைவில் நிர்ணயிக்கப்படும். இதேபோல, நுங்கம்பாக்கத்தில் சுழற்சி முறையில் அமைக் கப்படவுள்ள வாகன நிறுத் தத்துக்கு ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

          
SCROLL FOR NEXT