கோழிக்கறி சாப்பிடுவதால் வைரஸ் பாதிப்பு என்று தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கோவிட் 19 தடுப்பு நடவடிக்கையாக மக்கள் கூட்டமாக சேருவதை தவிர்க்கும் வகையில் வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கிலும், ஆட்சியர் அலுவலக தரைத்தளத்திலுமாக மக்களிடமிருந்து மனுக்களை அதிகாரிகள் பெற்றுக்..கண்டனர்.
கோவிட் 19 தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதால் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மனுக்களை நேரடியாக பெறவில்லை.
மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது திருநெல்வேலி மாவட்ட கோழிப்பண்ணையாளர்கள் அளித்த மனு:
வங்கிகளில் கடன் பெற்றும், அரசு வழங்கும் மானிய கடனிலும் கோழிப்பண்ணைகளை உருவாக்கி ..ப்பந்த முறையில் கோழிக்குஞ்சுகள், தீவனம் மற்றும் மருந்துகளை கோழி நிறுவனங்களிடம் இருந்து பெற்று அதன்மூலம் கோழிகளை வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறோம். தற்போது சமூகவலைத்தளங்களில் கோழிகள் மூலமாக கோவிட் 19 வைரஸ் பரவுவதாக மக்களிடம் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.
இதனால் கோழிகள் விற்பனை இல்லாமல் தேங்கிவிட்டன. மேலும் விலையும் மிக குறைந்துவிட்டது. உற்பத்தி விலையில் இருந்து ரூ. ஐம்பது குறைந்ததால் கோழிகளை விற்க முடியாமலும், கோழிகளை வளர்த்து ..கடுத்த பண்ணையாளர்களுக்கு வளர்ப்பு கூலி கடுக்க முடியாமலும் உள்ளது. பண்ணையாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலை நீடித்தால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோழி விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையை மாற்ற சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவதை தடுக்க வேண்டும். இந்த தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிராய்லர் கோழிக்கறி சாப்பிடுவதால் வைரஸ் பாதிப்பு இல்லை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மானூர் வட்டம் கீழப்பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பரமசிவன், மாடக்கண்ணு, கோமதிநாயகம், வேலு உள்ளிட்டோர் அளித்த மனு:
2017-ம் ஆண்டில் கீழப்பிள்ளையார்குளம் பகுதியில் நெற்பயிருக்கு காப்பீ்டடு ..தகை செலுத்தியிருந்தோம். பயிர்கள் காய்ந்து மகசூல் இழப்பு ஏற்பட்ட நிலையில் காப்பீட்டு ..தகைகேட்டு கேட்டு மனுக்கள் ..கடுத்திருந்தோம். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. சில விவசாயிகளுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. இப்பகுதியில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு ..தகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த அர்ச்சுனன் அளித்த மனுவில், திருநெல்வேலி டவுன் தாலுகா அலுவல வளாகத்தில் 10 அடி உயர மரக்கன்றுகளை நட்டு வைத்திருந்தோம். தற்போது இந்த மரக்கன்றுகள்மேல் மண்ணை போட்டு மூடிவருகிறார்கள். இந்த மண்ணை அகற்றி மரங்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பணகுடி வீரபாண்டியன் கீழூர் பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர்.