தமிழகம்

ஊராட்சிகளில் குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் கோரி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

பி.டி.ரவிச்சந்திரன்

ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் தொட்டி மோட்டார் இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ராமசாமி தலைமை வகித்தார்.

சி.ஐ.டி.யு., மாநில சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆர்.கணேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் தொட்டி மோட்டார் இயக்குபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.13 ஆயிரம் வழங்கவேண்டும்.

பணிஓய்வு பெறும் ஆப்பரேட்டர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கவேண்டும். குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய மாதம் ரூ.ஆயிரம் வழங்கவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்.

தூய்மைகாவலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT