மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகேயுள்ளது தேனூர். இங்குள்ள செல்போன் கோபுரத்தில் நேற்று இளைஞர் ஒருவர் திடீரென ஏறினார்.
மதுக்கடைகளை அடைக்கும்வரை கீழே இறங்கமாட்டேன் எனக் கூறினார். சமயநல்லூர் காவல் துணை கண்காப்பாளர் வேல்முருகன் தலைமையிலான போலீஸார் இளைஞருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் இறங்க சம்மதிக்கவில்லை.
மேலே ஏறியவர் யார்? என போலீஸார் விசாரித்தபோது, பாமக மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் மகாராஜன் என்பது தெரிந்தது.
நேற்றைய போராட்டத்தில் பாமக பங்கேற்காது என இக்கட்சித் தலைவர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், எதற்காகப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனப் போலீஸார் மகாராஜனிடம் எடுத்துக் கூறினர்.
இதையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக கூறி கோபுரத்தில் இருந்து அவர் இறங்கியதால் போலீஸார் நிம்மதியடைந்தனர்.