மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகாரின்பேரில் அரசுப் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டம் செம்பனார்கோயிலை அடுத்த நல்லாடை அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் நாராயண பிரசாத்(57). பள்ளி விடுமுறை நாளில் முன்னாள் மாணவி ஒருவர் உட்பட 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளை நாராயண பிரசாத் திருச்சி, தஞ்சாவூர், கல்லணை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது நாராயண பிரசாத்தங்களுக்கு பாலியல்ரீதியாகதொந்தரவு கொடுத்ததாகவும், வெளியில் சொன்னால் செய்முறை தேர்வில் மதிப்பெண்களை குறைத்துவிடுவேன் எனமிரட்டியதுடன், உறுதிமொழி வாங்கிக் கொண்டதாகவும் மாணவிகள் சிலர் பள்ளி நிர் வாகத்திடம் அண்மையில் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அறிவியல் ஆசிரியர் நாராயண பிரசாத் மற்றும் மாணவிகளிடம் பள்ளித் தலைமை ஆசிரியர் இளவரசன் விசாரணை நடத்தினார். பின்னர் கல்வித் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நாராயண பிரசாத் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார் ஆசிரியர் நாராயண பிரசாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.