தமிழகம்

தீண்டாமை எதிர்ப்பு கொள்கையை திமுக, அதிமுக கைவிட்டுவிட்டன: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பெரியாரின் தீண்டாமை எதிர்ப்பு கொள்கை போராட்டத்தை திமுக, அதிமுக கைவிட்டு பல ஆண்டுகள் ஆகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி அளிப்பு பொதுக் கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு நடை பெற்றது. நகர செயலாளர் தங்க மணி தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் பேசும்போது, “ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி இருப்ப வர்கள் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் மிகவும் அமைதி காத்து வருகின்றனர். அவர்களுக்கு குற்ற உணர்வு ஏற்பட்டுள்ளதால் பேசவில்லை. அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. சட்டப்பேரவை கூட்டத் தொடரில் லோக் ஆயுக்தா கொண்டு வர வலியுறுத்தப்படும்.

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை நீடித்து வருகிறது. உத்த புரம் தீண்டாமைச் சுவரை அகற்றினோம். தற்போது, திருவண்ணாமலையில் தலித் மக்களை இழிவுபடுத்தும் வகையில் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் தகர்ப்போம். பெரியாரின் தீண்டாமை எதிர்ப்பு கொள்கை போராட்டத்தை திமுக, அதிமுக கைவிட்டு பல ஆண்டுகள் ஆகின்றன” என்றார்.

SCROLL FOR NEXT