இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
விடுதலைப் போராட்டக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழையாமை இயக்கம்போல, தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு மக்கள் ஒத்துழைப்புத் தரக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள் விடுத்து வருகிறது.
1930 ஏப்ரலில் திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு உப்புச் சத்தியாகிரக பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. அதுபோல குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக ஏப்.13 முதல் 28 வரை திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம் என்றார்.