தமிழகம்

‘பெண் இன்று’ இணைப்பிதழ் வழங்கும் மகளிர் திருவிழா நிகழ்வு தள்ளி வைக்கப்படுகிறது: வைரஸ் பரவுவதை தடுக்க நடவடிக்கை

செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பு சார்பில் வரும் ஞாயிறன்று (மார்ச் 15) சென்னை டிஜி வைணவக் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவித்திருந்த மகளிர் திருவிழா நிகழ்வு தள்ளிவைக்கப்படுகிறது.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கோவிட்-19 வைரஸ் வேகமாகப் பரவிவிடும். எனவே இதைத் தடுக்கும் வகையில் மக்கள் அதிகமாக ஒரே இடத்தில் கூடுவதையும் கூட்டங்கள் நடத்துவதையும் தவிர்க்கும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதையேற்று, ஞாயிறன்று (மார்ச்-15) சென்னை டிஜி வைணவக் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவித்திருந்த மகளிர் திருவிழா நிகழ்வு மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகிறது. நிகழ்வு நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.

SCROLL FOR NEXT