தமிழகம்

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம்: திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு

செய்திப்பிரிவு

சென்னையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் ஒன்றுசேர்ந்து ‘சென்னை ஷாகீன் பாக்’ என்ற பெயரில் கடந்த 14-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மண்ணடியிலும் 27-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மண்ணடியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக வாக்களித்தது. மாநிலங்களவையில் அதிமுக ஆதரவுடன் குடியுரிமை சட்டம் நிறைவேறியது. அதிமுக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தால் இச்சட்டம் நிறைவேறி இருக்காது. குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

ஒத்துழையாமைக்கு அழைப்பு

ஆனால் அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை. எனவே, இந்த போராட்டத்தை தள்ளி வைத்து ஒத்துழையாமை போராட்டத்தை நடத்த வேண் டும். தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புறக்கணித்து போராட்டம் நடத்துவோம். இதற்கு, திமுக ஆதரவு அளிக் கும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT