2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக வீடுகளை கணக் கெடுக்கும் பணி ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது.
நம் நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும். கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது. அடுத்து 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக் கெடுப்பு நடைபெறும். இந்த நிலையில், 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் தமிழக அரசின் அரசிதழில் (கெஜட்) வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, முதல்கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி செப் டம்பர் 30-ம் தேதி வரை நடை பெறுகிறது.
வீடுகளை கணக்கெடுக்கும் போது 31 வகையான கேள்விகள் கேட்கப்படும் என அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.
கட்டிட எண், வீட்டு எண், வீட்டின் உறுதித்தன்மை, வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை, வீட்டு தலைவரின் பெயர், வீட்டு தலைவர் ஆதி திராவிடர் அல்லது பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவரா, சொந்த வீடா, குடிநீருக்கான முக்கிய ஆதாரம், கழிப்பிட வசதி, வீட்டில் கணினி, லேப்டாப் உள்ளதா, இரு சக்கர வாகனம் மற்றும் கார் இருக்கிறதா என்பன உள்ளிட்ட 31 கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. முதல்கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.