தமிழகம்

ஹாட் லீக்ஸ்: கராத்தே சாய்ஸ்... ரஜினி சார் வாய்ஸ்!

செய்திப்பிரிவு

திமுகவின் நிர்பந்தத்தால் காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் தொடர்ந்து திமுகவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தைக் கையிலெடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தன்வசப்படுத்த நினைத்தது திமுக. இதற்கு செக் வைக்க நினைத்த கராத்தே, இது விஷயமாக ரஜினியிடம் பேசினாராம். “நீங்கள் ஆன்மிக அரசியல் என்று சொல்லிவிட்டதால் உங்களுக்கு ஓரேயடியாக காவிச் சாயம் பூசி பாஜக ஆளாக சித்தரிக்க நினைக்கிறது திமுக. இதை மறுக்க வேண்டுமானால் இந்த நேரத்தில், அரசியல் கலப்பற்ற முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை அழைத்துப் பேசி அவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாகப் பேசுங்கள்; திமுகவின் சதியை முறியடித்துவிடலாம்” என்று கராத்தே சொன்னதைக் கேட்டுத்தான் ஹெஜ் குழும தலைவர் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசினாராம் ரஜினி.

- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 18, 2020)

SCROLL FOR NEXT