கோப்புப்படம் 
தமிழகம்

‘பொறியியல்’ கல்வி மீதான ஆர்வம் குறைவதால் 122 கல்லூரிகளில் இடங்கள் பாதியாக குறைப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 28 தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முழுவதுமாக நிறுத்தப்பட உள்ளது. 122 பொறியியல்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைஇடங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 500-க்கும் மேற்பட்டபொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தகல்லூரிகள் ஆண்டுதோறும் தங்கள் இணைப்பு அந்தஸ்தை அண்ணா பல்கலை. வழியாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்திடம் (ஏஐசிடிஇ) புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னரே பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.

அதன்படி, கல்லூரிகள் வரும் கல்விஆண்டுக்கான இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்க அபராதத் தொகையுடன் மார்ச் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த அவகாசம்முடிந்துவிட்ட நிலையில், வரும் கல்விஆண்டில் 28 கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலை. அதிகாரிகள் கூறியதாவது:

2020-21 கல்வியாண்டு முதல்மாணவர் சேர்க்கையை நிறுத்திவிட 11 தனியார் பொறியியல் கல்லூரிகள் முன்வந்துள்ளன. இணைப்பு அந்தஸ்தைபுதுப்பிக்க 17 கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை. இந்த 28 கல்லூரிகளிலும் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறாது. இதேபோல, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி, கடந்த 5ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை 50சதவீதத்துக்கும் குறைவாக உள்ள 122பொறியியல் கல்லூரிகள், 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன.

இயந்திரவியல், கட்டிடவியல்

பொதுமக்கள் மத்தியில் பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் குறைந்து வருவதாலும், இயந்திரவியல், கட்டிடவியல், கணினி அறிவியல் போன்ற முதன்மைப் பாடப் பிரிவுகளிலேயே சேர்க்கை வெகுவாக குறைவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது இதனால், வரும் கல்வி ஆண்டுக்கான பொறியியல் கலந் தாய்வில் சுமார் 17 ஆயிரம் இடங்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT