மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை முகாமில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது.
ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தின் துவக்கத்தை முன்னிட்டு வசந்த விழாவாக ஹோலி பண்டிகையை வட இந்தியர்கள் கொண்டாடடுவது வழக்கம்.
இதனை முன்னிட்டு மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு முகாமில் சிஐஎஸ்எஃப் படை வீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஹோலி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடினார்.
சிஐஎஸ்எஃப் மைதானத்தில் நடைபெற்ற ஹோலி பண்டிகையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி கமாண்டன்ட் சனீஸ்க் மற்றும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
அதேபோல், மதுரை விமான நிலையத்தில் அமைந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம் அலுவலகத்தில் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கியும், வண்ணப்பொடிகளை முகத்தில் பூசியும், நடனமாடியும், வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் பறிமாறி கொண்டாடினர்.